தூத்துக்குடியில், செவ்வாய்க்கிழமை தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு
தூத்துக்குடியில், செவ்வாய்க்கிழமை தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு வரவேற்பு கொடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி. நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். அவருக்கு தூத்துக்குடி இந்திய உணவுக்கழக குடோன் அருகே வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எனது தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. ஆகையால் தூத்துக்குடி மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.