தூத்துக்குடி மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-11-28 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

46 கிலோ கேக் வெட்டி...

சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தட்டார்மடத்தில் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கி, கட்சி கொடியேற்றி 46 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 100 தூய்மை பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசிப்பை வழங்கப்பட்டது.

ஒன்றிய அவைத்தலைவர் ராஜபாண்டி, மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, நடுவக்குறிச்சி முன்னாள் ஊராட்சி தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். முரளி ஜெயகிருஷ்ணன் நன்றி கூறினார்.

வேட்டி-சேலை, மரக்கன்றுகள்

சாத்தான்குளம் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் முதலூரில் நடந்த விழாவில் மத்திய ஒன்றிய செயலாளரும், முதலூர் ஊராட்சி தலைவருமான பொன்முருகேசன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் நடந்த விழாவுக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.ஜோசப் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மகா.இளங்கோ, ஒன்றிய அவைத் தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 400 பேருக்கு தேக்கு உள்ளிட்ட பலவகையான மரக்கன்றுகளும், 46 தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலையும் வழங்கப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

ஆத்தூர் மெயின் பஜாரில் நகர தி.மு.க. சார்பில் நடந்த விழாவுக்கு நகர செயலாளர் எம்.பி.முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி உமரிசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர்‌ ஏ.கே.கமால்தீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு சீருடைகள்

உடன்குடி மேற்கு ஒன்றியத்தில் யூனியன் தலைவர் டி.பி.பாலசிங் தலைமையில் பல்வேறு விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், சீருடைகள், மதிய உணவு, இனிப்பு வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் க.இளங்கோ ஏற்பாட்டில் பரமன்குறிச்சி, தண்டுபத்து, சீர்காட்சி, நயினார்பத்து, மணப்பாடு, குலசேகரன்பட்டினம் பகுதிகளில் ஏழைகளுக்கு தையல் எந்திரம், சலவை எந்திரம், சேலைகள், மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.

உடன்குடி நகர தி.மு.க. செயலாளரும், பேரூராட்சி துணைத்தலைவருமான மால்ராஜேஷ் ஏற்பாட்டில் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. யூனியன் துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப் கல்லாசி, பேரூராட்சி கவுன்சிலர் மும்தாஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாயர்புரத்தில் நகர தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்