தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-02 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கொலை வழக்கு

ஸ்ரீவைகுண்டம் ஆதிச்சநல்லூரை சேர்ந்த மூக்கன் மகன் இசக்கிபாண்டி (வயது 32) என்பவரை ஸ்ரீவைகுண்டம் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். செய்துங்கநல்லூர் சிவனனைந்த பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மலையாண்டி மகன் சுடலைமுத்து (23) என்பவரை செல்போன், மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று கயத்தாறு செட்டிக்குறிச்சி அருகே அழகுதுரை என்பவரை கொலை செய்த வழக்கில், தென்காசி மாவட்டம் கே.கரிசல்குளத்தை சேர்ந்த மாடசாமி என்ற மாடக்கண்ணு மகன் பட்டுராஜ் (29), அங்கையற்கண்ணி மகன் நாகராஜன் (38), கடல் என்ற மருதுபாண்டியன் மகன் முருகன் என்ற பாலமுருகன் (29), கொடுங்கால பாண்டியன் மகன் மாரியப்பன் என்ற ஸ்டாலின் (31), கயத்தார் மஞ்சநம்பிகிணறை சேர்ந்த சின்ன குருசாமி மகன் கனகராஜ் (33) ஆகியோரை கயத்தார் போலீசார் கைது செய்தனர்.

குண்டர் சட்டம்

இவர்கள் 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், இசக்கிப்பாண்டி, சுடலைமுத்து, பட்டுராஜ், நாகராஜன், முருகன் என்ற பாலமுருகன், மாரியப்பன் என்ற ஸ்டாலின், கனகராஜ் ஆகிய 7 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உள்பட 229 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்