திருப்பரங்குன்றம் கோவிலில் 'கியூ.ஆர். கோடு' மூலம் காணிக்கை வசூல்

திருப்பரங்குன்றம் கோவிலில் ‘கியூ.ஆர். கோடு’ மூலம் காணிக்கை வசூல்.

Update: 2023-09-29 18:08 GMT

திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதற்காக கோவிலுக்குள் 40 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் திருவிழா மற்றும் முகூர்த்த காலங்களில் சிறப்பு தரிசனம் செய்வதற்காக ஒரு நபருக்கு ரூ.100 கட்டணமும், இதர நாட்களில் ஒரு நபருக்கு ரூ.50 கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளை நேரடியாக அலுவலகத்தில் செலுத்துவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இணையதள வசதிகள் மூலமாக கோவில் வங்கி கணக்கில் காணிக்கைகள் மற்றும் நன்கொடை செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் செல்போன் மூலமாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனையாக கியூ.ஆர். கோடு மூலம் நன்கொடைகள், காணிக்கைகள் செலுத்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்