திருச்செந்தூரில் பெண் தீக்குளித்து தற்கொலை

திருச்செந்தூரில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-26 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அமலிநகர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் கிளாட்வின். மீனவர். இவரது மனைவி அந்தோணியம்மாள் (வயது 38). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில், அந்தோணியம்மாள் கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பகலில் வீட்டின் சமையல் அறையில் அந்தோணியம்மாள், திடீரென்று தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவருடைய அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று தீயை அணைத்து, அவரை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்