திருச்செந்தூரில்மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

திருச்செந்தூரில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-03 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி பகுதியை சேர்ந்த குருத்து மகன் ஜெயராஜ் (வயது54). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை திருச்செந்தூர் பஸ்நிலையம் அடுத்துள்ள காய்கறி மார்க்கெட் அருகில் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் அவர் திரும்பி வந்தபோது, மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்று விட்டார்.

இதுகுறித்து ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், காயல்பட்டினம் உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஹசன் மகன் ஷேக் முகமது (39) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்