திருச்செந்தூரில்டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு தி.மு.க பிரமுகர் மாலை
திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு தி.மு.க பிரமுகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே காயாமொழியை சேர்ந்த கணேஷ்குமார் ஆதித்தனுக்கு தி.மு.க. மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று அவர் காயாமொழியில் உள்ள தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், மறைந்த மாலைமுரசு நிர்வாக ஆசிரியர் பா. இராமச்சந்திர ஆதித்தனார் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், தி.மு.க. பிரமுகர்கள் அமிர்தலிங்கம் இசக்கிமுத்து, பட்டாணி, அன்வர் பாய் சலீம் கான், லட்சுமணன், தளவாய்புரம் தனபால், ராஜதுரை, பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.