திருச்செந்தூரில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்
திருச்செந்தூரில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்:
விடுதலை போராட்ட வீரர் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் 165-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செந்தூர் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இரும்பு ஆர்ச் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த இரட்டைமலை சீனிவாசனார் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் கலந்து கொண்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தினார். பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் நகர பொருளாளர் தோப்பூர் சரண், துணை செயலாளர் ஜெயின் ஜெயபால், உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், திருச்செந்தூர் நகர பொறுப்பாளர் ஆறுவளவன், திருச்செந்தூர் ஒன்றிய சமூக நல்லிணக்கப் பேரவை ஒன்றிய துணை அமைப்பாளர் சுகுமார், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் நெய்தல் நிலவன், விடுதலை கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் சிறுத்தை சிவா, டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவர் இசக்கிமுத்து, தோப்பூர் முகாம் பொறுப்பாளர் திருமாவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.