தூத்துக்குடி மாநகர பகுதியில்கனரக வாகனங்கள் வந்து, செல்லும் நேரம் மாற்றம்

தூத்துக்குடி மாநகர பகுதியில் கனரக வாகனங்கள் வந்து, செல்லும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-03 18:45 GMT

தூத்துக்குடி மாநகர பகுதியில் கனரக வாகனங்கள் வந்து, செல்லும் நேரத்தை மாற்றியமைத்து அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாகவும், அதற்கான திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு மக்கள் அதிக நடமாட்டம் உள்ள நேரங்களில் கனரக வாகனங்கள் மாநகர பகுதிக்குள் வருவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.

தடை

அதன்படி, தூத்துக்குடி மாநகர பகுதியில் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் கனரக வாகனங்கள் தூத்துக்குடி நகர பகுதிக்குள் வந்து, செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, தாசில்தார் செல்வக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்