தூத்துக்குடியில், வெள்ளிக்கிழமை அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க அழைப்பு

தூத்துக்குடியில், வெள்ளிக்கிழமை அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் தி.மு.க.வினர் திரளாக பங்கேற்க அமைச்சர் கீதாஜீவன் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2023-09-14 18:45 GMT

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க.வை தோற்றுவித்தவரும், தமிழருக்கு பாதுகாப்பு இயக்கமாக தி.மு.க.வை மாற்றி, அதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி அமைத்தவர் பேரறிஞர் அண்ணா. அவர் முதல்-அமைச்சராக இருந்த 2 ஆண்டு காலத்தில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம், இருமொழி கொள்கை, சுயமரியாதை திருமண சட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். அவருடைய பிறந்தநாள் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் ரவுண்டானாவில் உள்ள பேரறிஞர் அண்ணா உருவச்சிலைக்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், சட்டமன்ற, உறுப்பினர்கள், மாவட்ட, தலைமை கழக நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்