தூத்துக்குடி மாநகராட்சியில்2 கடைகளுக்கு சீல் வைப்பு
தூத்துக்குடி மாநகராட்சியில் 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த சாலைகளின் ஓரத்தில் நடைமேடைகளும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடைமேடைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மார்க்கெட் அருகே 2 கடைகளில் நடைபாதையில் பொருள்களை வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.