தேரியூர் பள்ளியில்யோகா, இயற்கை உணவு பயிற்சி முகாம்
தேரியூர் பள்ளியில் யோகா, இயற்கை உணவு பயிற்சி முகாம் நடந்தது.
உடன்குடி:
உடன்குடி தேரியூர்ஸ்ரீ ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரை யோகா மற்றும் இயற்கை உணவுபயிற்சி முகாம் நடந்து வருகிறது. வருகிற மே.28-ந் தேதி வரை நடைபெறும் இம்முகாமில் அதிகமாக இயற்கை உணவை உட்கொள்ள வேண்டும், தினமும் யோகா பயிற்சி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இதில் சிறுவர் முதல் முதியவர்கள் வரை பங்கேற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பாரத மாதா சேவா அமைப்பினர் செய்துள்ளனர்.