தேனி மாவட்டத்தில் பா.ஜ.க., இந்து முன்னணி அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

தேனி மாவட்டத்தில் பா.ஜ.க., இந்து முன்னணி அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2022-09-25 16:36 GMT

தமிழகத்தில் சில இடங்களில் பா.ஜ.க. அலுவலகங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இந்த சம்பவம் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், தேனியில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள வணிக வளாகத்துக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுபோல் மாவட்டத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகங்கள், இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுபோல் பா.ஜ.க., இந்து அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளின் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்