தேனி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தேனி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் அரசு செயலாளரும், தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான கார்த்திக் தேனி மாவட்டத்துக்கு இன்று வந்தார். அவர், தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலைய பூங்கா பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் மற்றும் கல்வி மையத்துக்கான கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதுபோல் ஆண்டிப்பட்டி ஒன்றியம் திருமலாபுரம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் நடந்து வரும் வளர்ச்சித் திட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வை தொடர்ந்து ஒருங்கிணைந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக
கூட்டரங்கில் அரசு திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கார்த்திக் தலைமை தாங்கி முடிவுற்ற திட்ட பணிகள் மற்றும் நடந்து வரும் திட்டப்பணிகளை முன்னேற்றம் குறித்து துறை வாரியாக ஆய்வு செய்தார். இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலை வகித்தார்.