தேனி மாவட்டத்தில்பறவைகள் கணக்கெடுக்கும் பணி:இன்று நடக்கிறது
தேனி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடக்கிறது.
தேனி மாவட்ட வனத்துறை சார்பில், மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் இணைந்து இந்த கணக் கெடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் சுமார் 20 நீர்நிலைகளை மையமாக வைத்து கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்க ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் தேனி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.