தண்ணீர் தொட்டியில் பதுங்கி பாம்பு பிடிபட்டது

தூத்துக்குடியில் தண்ணீர் தொட்டியில் பதுங்கி பாம்பு பிடிபட்டது

Update: 2022-06-14 15:19 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி தனசேகரன் நகரை சேர்ந்தவர் கரண். இவர் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஒரு பாம்பு கிடந்தது. இதனை பார்த்த கரண் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தூத்துக்குடி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்றனர். அங்கு தண்ணீர் தொட்டியில் பதுங்கி இருந்த அதிக விஷத் தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை காட்டுப்பகுதியில் சென்று விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்