படுக்கப்பத்து கிராமத்தில் ரூ.3½ கோடியில் புதிய துணை மின் நிலையம் அடிக்கல் நாட்டுவிழா

படுக்கப்பத்து கிராமத்தில் ரூ.3½ கோடியில் புதிய துணை மின் நிலையம் அடிக்கல் நாட்டுவிழா

Update: 2022-12-04 18:45 GMT

தட்டார்மடம்:

படுக்கப்பத்து கிராமத்தில் ரூ.3½கோடியில் புதிய துணை மின் நிலையத்துக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

புதிய துணை மின்நிலையம்

உடன்குடி உபகோட்டம் படுக்கபத்து கிராமத்தில் ரூ.3½ கோடியில் 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பேசினார். அப்போது அவர் பேசுகையில், புதிதாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச மின்சாரம் வழங்கி உள்ளார். மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசம் மின்சார வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே இங்கு புதிய துணை மின் நிலையம் கட்டப்பட உள்ளது. இந்த துணை மின்நிலையம் மூலமாக சொக்கன் குடியிருப்பு, பெரியதாழை, உசரத்துக்கு குடியிருப்பு, செட்டிவிளை, கொமட்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு தாராளமாக மின்சாரம் கிடைக்கும், என்றார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, யூனியன் ஆணையாளர் ராஜேஷ்குமார், திருச்செந்தூர் மின் செயற்பொறியாளர் விஜய சங்கர பாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் நாகராஜன், சரவண சுந்தரி, தர்மராஜ், ஆறுமுகம், மோகன் ஜெய் சிங் , ரெமிட்டன், ஜெயக்குமார் மாநில தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராம ஜெயம், உடன்குடி ஒன்றிய செயலாளர் இளங்கோ, சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் கள் ஜோசப் பாலமுருகன் பொன் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை படுக்கப்பத்து உதவி செயற்பொறியாளர் வேலாயுதம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்