தியாகதுருகம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட அதிகாரி ஆய்வு

தியாகதுருகம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை திட்ட அதிகாரி ஆய்வு செய்தாா்.;

Update:2022-09-07 20:09 IST

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தலூர், தியாகை, வேங்கைவாடி குடியநல்லூர் ஆகிய ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிகள் மற்றும் திறந்தவெளி கிணறு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குனர் மணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகளை தரமாக, விரைந்து முடிக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து சித்தலூர் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள வீடுகளை பார்வையிட்டார். அப்போது சமத்துவபுரத்தில் உள்ள பழுதடைந்த 100 வீடுகளையும் உடனடியாக புனரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, பன்னீர்செல்வம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சி வேலு, ஒன்றிய உதவி பொறியாளர்கள் ஜெயபிரகாஷ், கோபி மற்றும் அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்