போடியில்பரமசிவன் மலைக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
போடியில் பரமசிவன் மலைக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.
போடியில் ஸ்ரீ பரமசிவன் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி போடி பஸ் நிலையம் அருகே உள்ள பெரியாண்டவர் கோவிலில் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடி மரம் நகரின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மலைக் கோவிலில் உள்ள மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. விழாவில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்செல்வன், நகர செயலாளர் புருஷோத்தமன், மாநில பொதுக்குழு உறுப்பினரும் தி.மு.க. கவுன்சிலருமான சங்கர், நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, நகர அ.தி.மு.க. செயலாளர் சேது, போடி வர்த்த சங்க தலைவர் வேல்முருகன், சத்திய சாயி சேவா சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.