போடியில் கோவில் அருகே ஆண் பிணம்

போடியில், கோவில் அருகே ஆண் பிணம் கிடந்தது

Update: 2022-10-15 16:26 GMT

போடியில், சாய்பாபா கோவில் அருகே செல்லும் கழிவுநீர் ஓடை பக்கத்தில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போடி நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணத்திற்கு அருகே மருந்து சீட்டு ஒன்று கிடந்தது. அதில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், அவரது பெயர் முருகன் (வயது 55) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்