போடியில் மாணவிகள் விடுதி, ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு
போடி நகரில் உள்ள ஆதிதிராவிடர் அரசு மாணவிகள் விடுதி மற்றும் ரேஷன் கடையில் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
போடி நகரில் உள்ள ஆதிதிராவிடர் அரசு மாணவிகள் விடுதி மற்றும் ரேஷன் கடையில் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் மாணவிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்ற கலெக்டர், அரிசி இருப்பு, பொருட்களின் எடை அளவு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் ராசிங்கபுரம், சிலமலை, கோடாங்கிபட்டி ஆகிய பகுதியில் உள்ள வருவாய் அலுவலகங்களில் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு விவசாயிகள் இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கான முகாம்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.