போடியில் ஜவுளி வியாபாரி வீட்டுக்குள் புகுந்த பாம்பு

போடியில் ஜவுளி வியாபாரி வீட்டுக்குள் பாம்பு புகுந்தது.

Update: 2022-10-11 16:00 GMT

போடி அரண்மனை தெருவை சேர்ந்தவர் முகமது யாசின். ஜவுளி வியாபாரி. இன்று காலை இவரது வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் சுமார் ½ மணி நேரம் போராடி வீட்டில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்டது சுமார் 5 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஆகும். இதையடுத்து அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்