போடியில்கணபதி கோவிலுக்குள் புகுந்த பாம்பு
போடியில் கணபதி கோவிலுக்குள் பாம்பு புகுந்தது.
போடி கிருஷ்ணா நகர் அருகே மகாலட்சுமி நகரில் கன்னிமூல கணபதி கோவில் உள்ளது. இங்கு நேற்று காலை பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்ட பக்்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி அங்கு பதுங்கி இருந்த பாம்பை பிடித்தனர். பிடிபட்டது சுமார் 6 அடி நீள நல்ல பாம்பு ஆகும். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.