போடியில் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

போடியில் 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-10-27 18:45 GMT

போடி வடக்கு ராஜ் வீதி செல்லாயியம்மன் கோவில் அருகே மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்ட வழங்கல் அலுவலர் ராமராஜ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கோவில் அருகே மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனை சோதனை செய்தபோது 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் போடியில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரேஷன் அரிசி எப்படி இங்கு வந்தது, யார் கொண்டு வந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்