பல்லவராயன்பட்டியில்பிப்ரவரி 12-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு

பல்லவரான்பட்டியில் பிப்ரவரி 12-ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2023-01-05 18:45 GMT

சின்னமனூர் அருகே பல்லவராயன்பட்டி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு அடுத்த மாதம் (பிப்ரவரி) 12-ந்தேதி நடத்த கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்கு அனுமதிகேட்டு மனு கொடுக்க அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் மக்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், "எங்கள் கிராமத்தில் வருகிற பிப்ரவரி 12-ந்தேதி ஜல்லிக்கட்டு நடக்க உள்ளதால் அதற்கு உரிய அனுமதி வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்