தேவாரத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

தேவாரத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.

Update: 2022-11-25 18:45 GMT

தேவாரம் காமராஜர் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் (வயது 32). நேற்று முன்தினம் இரவு இவர், தேவாரம் 18-ம் கால்வாய் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். தண்ணீர் பாய்ச்சிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது அருகே உள்ள தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் அவர் மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த தேவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சூரிய பிரகாஷ் மனைவி பிரியங்கா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அனுமதியின்றி வேலி போட்டதாக தேவாரம் பெருமாள்பட்டியை சேர்ந்த பால்பாண்டி (42) என்பவரை கைது செய்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்