படுக்கப்பத்து கோவிலில்திருவிளக்கு பூஜை
படுக்கப்பத்து கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.;
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே உள்ள படுக்கப்பத்து வடக்குத் தெரு பெரிய முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர். தொடர்ந்து ஆத்ம சைதன்ய பீடம் மகா ப்ரந்தியங்கிரா தேவி குரு ஆத்ம சைதன்யா மஹராஜ் ஆசியுரை வழங்கினார். மாலையில் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளாக பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி அம்பாளை வழிப்பட்டனர். இரவு 7 சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.