ஓட்டப்பிடாரத்தில் கிராமக் கோவில் பூசாரிகள் சங்க கூட்டம்

ஓட்டப்பிடாரத்தில் கிராமக் கோவில் பூசாரிகள் சங்க கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-25 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரத்தில் கிராம கோவில் பூசாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் மாவட்ட அமைப்பாளர் சுப்பையா தலைமை தாங்கினார். ஒன்றிய அமைப்பாளர் ராமசாமி, ஒன்றிய இணை அமைப்பாளர் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் நபர்களுக்கு தமிழக அரசு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஓய்வு ஊதியம் பெற ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெங்கநாதன், மாவட்ட துணை அமைப்பாளர் சுடலைமணி, மாவட்ட அமைப்பாளர் சரவணன், ஒன்றிய இணை அமைப்பாளர் ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காலையில் கருங்குளம் ஒன்றிய கிராம கோவில் பூசாரிகள் சங்க கூட்டம் புளியம்பட்டி அருகே உள்ள சவலாப்பேரி சமுதாய நலகூடத்தில் ஒன்றிய அமைப்பாளர் துரைராஜ் தலைமையில் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்