கயத்தாறு பகுதி பள்ளிகளில்போதைப்பொருள் ஒழிப்புவிழிப்புணர்வு கூட்டம்
கயத்தாறு பகுதி பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறில் போலீஸ்துறை சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளி, மதர் தெரெசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வில்லிசேரி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்- இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் மற்றும் போலீசார் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடம் விளக்கி கூறினர். இதில்
கயத்தாறு பள்ளி தலைமையாசிரியை சுதா, உதவி ஆசிரியர் தேவி, வில்லிசேரி தலைமையாசிரியர் வெங்கடேஷ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.