மாவட்டத்தில் ஒரே நாளில்மது விற்ற 22 பேர் கைது

மாவட்டத்தில் ஒரே நாளில் மது விற்ற 22 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-05-14 22:05 GMT

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக 22 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 193 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும், ஆசனூர் பகுதியில் அரசு அனுமதியின்றி மது அருந்த அனுமதித்த குற்றத்திற்காக அதே பகுதியை சேர்ந்த பிரவீன்ராஜ் (வயது 25), ரமேஷ் (43), ராமச்சந்திரன் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்