முதுகலை தட்டச்சு தேர்வில் ஆண்டிப்பட்டி மாணவர் மாநில அளவில் முதலிடம்

முதுகலை தட்டச்சு தேர்வில் ஆண்டிப்பட்டி மாணவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து அசத்தினார்

Update: 2022-06-03 18:10 GMT

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு தேர்வு நடைபெற்றது. தேனி மாவட்டத்திலும் 4 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். இந்த தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதில் ஆண்டிப்பட்டி அன்பு தட்டச்சு பள்ளி மாணவர் சரவணபுவனேஷ் முதுகலை ஆங்கில தட்டச்சு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரை தட்டச்சு பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன், முதல்வர் உமாமகேஷ்வரி மற்றும் பெற்றோர் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்