கம்பம் பகுதியில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்: வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

Update: 2022-12-11 18:45 GMT

கம்பம் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 2022- 23-ம் ஆண்டு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் மற்றும் புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், குமில், வேங்கை, மகாகனி, செம்மரம் ஆகிய மரக்கன்றுகள் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த மரக்கன்றுகளை பெறுவதற்கு ஆதார், வங்கிக் கணக்கு புத்தகம், நிலத்தின் சிட்டா நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கம்பம் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெற்று கொள்ளலாம். இந்த தகவலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பூங்கோதை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்