கம்பம் பகுதியில் வனக்குற்றங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும்: ஊராட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்தல்

கம்பம் பகுதியில் வனக்குற்றங்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என ஊராட்சி தலைவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-10-30 18:45 GMT

கம்பம் கிழக்கு வனச்சரகம், ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, சின்ன ஓவுலாபுரம் ஆகிய ஊராட்சிகளும், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியும் உள்ளன. இங்குள்ள சிலர் வனப்பகுதியில் உள்ள விலங்குகளை வேட்டையாடுவது, மரங்களை வெட்டி கடத்துவது, அருகில் உள்ள பட்டாக்காடு உரிமையாளர்கள் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை உயிர் பலி ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புலிகள் காப்பகத்தில் இந்த கிராமங்கள் வருவதால் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் வனக்குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து ஊராட்சி தலைவர்களுக்கு கம்பம் கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்