கம்பம் பகுதியில் வயல்களில் வாத்து கிடை அமைக்கும் விவசாயிகள்

கம்பம் பகுதியில் வயல்களில் விவசாயிகள் வாத்து கிடை அமைத்து வருகின்றனர்.

Update: 2022-11-07 18:45 GMT

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கம்பம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, தொட்டன்மன்துறை, காமயகவுண்டன்பட்டி, அண்ணாபுரம், சின்னவாய்க்கால் பகுதியில் எந்திரங்கள் மூலம் முதல்போக நெல் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. அறுவடை முடிந்த வயல்களில் 2-ம் போக சாகுபடிக்கு நிலத்தை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

2-ம் போக சாகுபடி தொடங்க உள்ள நிலையில் இடைப்பட்ட காலங்களில் வயல்வெளிகளில் ஆடு மற்றும் வாத்துகளின் கிடைகள் அமைத்து அதன் எச்சங்களை உரமாக்கி அதிக மகசூல் எடுக்கும் நடவடிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கம்பம் ஊமையன் வாய்க்கால், உத்தமுத்து பாசன பரவு சின்னவாய்க்கால், உடைப்படி குளம் பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வாத்துகளுக்கு தேவையான புழு, பூச்சிகள் மற்றும் இறைகள் கிடைப்பதால் வாத்து மேய்ப்பவர்கள் கிடை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதுகுறித்து வாத்து மேய்ப்பவர்கள் கூறுகையில், வாத்துகள் வயல்வெளிகளில் உள்ள புழு மற்றும் பூச்சிகளை இரையாக உட்கொள்ளும்போது அதிக பருமனான முட்டை கொடுக்கின்றன. இதனால் அறுவடை செய்யப்பட்ட வயல்வெளிகளில் கிடை அமைத்துள்ளதாக தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்