பொய்கை வாரச்சந்தையில் மாடுகள் வரத்து குறைவு

பொய்கை வாரச்சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது.

Update: 2023-04-04 19:38 GMT

பொய்கை வாரச்சந்தையில் மாடுகள் வரத்து குறைந்தது.

வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமானது பொய்கை மாட்டுச்சந்தை. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடக்கும் வார சந்தைக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான உழவு மாடுகள் கறவை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறு கொண்டு வரப்படும் கறவை மாடுகள் மற்றும் மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு சுங்கவரி வசூல் செய்யும் உரிமைக்கான 2023-24-ம் ஆண்டுக்கான ஏலம் ரூ.96 லட்சம் ரூபாய்க்கு போனது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான முதல் வார சந்தை நேற்று கூடியது. ஆனால் மாடுகள் வரத்து குைறந்ததால் ஏலதாரர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஏலம் எடுத்த அதே பகுதியைச்சேர்ந்த லோகநாதன் என்பவரிடம் கேட்டதற்கு சென்னை, சேலம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பொய்கை வாரச்சந்தைக்கு வருவர்.

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வெளியூர் வியாபாரிகள் யாரும் வராததால் இங்கு வியாபாரம் களை கட்டவில்லை. விவசாயம் மெல்ல மெல்ல அழிந்து வருவதால் கறவை மாடுகளும் உழவு மாடுகளும் வாங்குவதற்கு விவசாயிகள் முன் வருவதில்லை மாடுகள் வரத்து அதிகம் இருக்கும் என நம்பி ரூ.96 லட்சத்துக்கு ஏலம் எடுத்ததால் நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.

வாரந்தோறும் சுமார் 2 ஆயிரம் மாடுகளுக்கு மேல் விற்பனைக்கு வந்தால் தான் நாங்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியும் காய்கறி வியாபாரிகளிடம் வசூல் செய்வது வெறும் சொற்பவரி விவசாயிகள் அதிக பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் அவர்களிடம் அதிக சுங்கவரியை வசூல் செய்ய முடியாது. அடுத்த ஆண்டு முதல் நாங்கள் ஏலம் கேட்கவே போவதில்லை அரசாங்கமே எடுத்து நடத்தினால் தான் இதில் வரும் லாப நஷ்ட கணக்குகள் அவர்களுக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்