போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடன் தொல்லையால் பெண் தீக்குளிக்க முயற்சி

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடன் தொல்லையால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது;

Update: 2022-07-11 15:54 GMT

தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்த சிவனேசன் மனைவி கவுமாரி (வயது 37). இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அலுவலகத்துக்கு வெளியே அவர் ஒரு பையில் மறைத்து எடுத்து வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கு நின்ற போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவர் கூறுகையில், நான் கூடலூரில் சிலரிடம் கடன் வாங்கி இருந்தேன். கடனை திருப்பிச் செலுத்த முடியாத சூழலில் திருப்பூரில் வசித்து வந்தேன். நேற்று முன்தினம் எனது தாயை பார்க்க போடிக்கு வந்தேன். அப்போது கடன் கொடுத்த சிலர் நேரில் வந்து மிரட்டினர். கடன் தொல்லையால் தீக்குளிக்க வந்தேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அறிவுரைகள் கூறி அவரை கூடலூர் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏறபடுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்