மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியது.

நீலகிரியில், மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியது.

Update: 2023-06-25 18:45 GMT

ஊட்டி: நீலகிரியில், மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியது.

பழங்களின் ராணி

மலை மாவட்டமான நீலகிரியில் ரம்பூட்டான், மங்குஸ்தான், பிளம்ஸ், பீச், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் விளைவிக்கப்படுகின்றன. இதில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர், கல்லாறு மற்றும் குற்றாலம், குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மங்குஸ்தான் பழம் விளைவிக்கப்படுகிறது. ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை மங்குஸ்தான் பழ சீசன் இருக்கும். மங்குஸ்தான் பழம் பழங்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. மரங்களில் கொத்து கொத்தாக காய்க்கும் இந்த பழங்கள் நன்கு பழுத்தவுடன் மேல்பகுதி ஓடு கடினத்தன்மையை இழந்துவிடும். ஓட்டை பிரித்தால் உட்புறம் சிறிது புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் பழ சுளைகள் இருக்கும். இந்த பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்கின்றனர். மேலும் மருத்துவ குணமும் கொண்டது.

சீசன் தொடங்கியது

இந்த நிலையில் நீலகிரியில் மங்குஸ்தான் பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் அரசு தோட்டக்கலை பண்ணையில் மங்குஸ்தான் பழம் காய்த்து குலுங்குகின்றன. இதுகுறித்து தோட்டக்கலை துறையினர் கூறுகையில், நீலகிரியில் மங்குஸ்தான் பழம் சீசன் தொடங்கியுள்ளது. இந்த பழம் மருத்துவ குணம் கொண்டது. குறிப்பிடும்படியாக உடலில் உள்ள விஷத்தை முறிக்கும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும். கண் எரிச்சலை நீக்கும் மற்றும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மையுடையது. தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் பா்லியாா் பண்ணையிலும் மங்குஸ்தான் பழம் கொத்து, கொத்தாக காய்த்துள்ளன. எனவே, அடுத்த மாதம் பழங்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்