நியோ-மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில்கைதான இயக்குனர்கள் 2 பேர் சிறையில் அடைப்பு

நியோ-மேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான இயக்குனர்கள் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர் .

Update: 2023-09-18 20:29 GMT


மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோ-மேக்ஸ் என்ற நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களும் பல்வேறு மாவட்டத்தில் இயங்கின. இந்த நிறுவனங்கள் கூடுதல் வட்டி தருவதாகவும், குறிப்பிட்ட ஆண்டில் அசல் தொகைக்கு இரட்டிப்பு தொகை வழங்குவதாகவும், கட்டிய பணத்திற்கு நிலம் தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி, வாடிக்கையாளர்களை கவர்ந்தன. இதன் மூலம் பல கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றியதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

அதன் பேரில் நியோ-மேக்ஸ் மற்றும் துணை நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் மதுரை கமலக்கண்ணன் (வயது 55), பாலசுப்பிரமணியன் (54), திருச்சி வீரசக்தி (49), முகவர்கள் காரியாபட்டி மணிவண்ணன், செல்லம்மாள் உள்ளிட்டவர்கள் மீது மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன், சிங்காரவேலன்(56) ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு தனி பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்தனர். ைகதானவர்கள் நேற்று மதுரை பொருளாதார குற்றவழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி(பொறுப்பு) தமிழரசி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்படடனர்.

Tags:    

மேலும் செய்திகள்