மினி பஸ்சில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை அபேஸ்

நெல்லையில் மினி பஸ்சில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை அபேஸ் செய்யப்பட்டது.

Update: 2022-10-17 20:01 GMT

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவருடைய மனைவி ஜானகி (வயது 67). இவர் சம்பவத்தன்று வி.எம்.சத்திரத்தில் இருந்து வண்ணார்பேட்டைக்கு மினி பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது அருகில் அமர்ந்து இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஜானகியிடம், ''உங்களது தங்க சங்கிலி அறுந்துள்ளது. அதனை கழட்டி பையில் வைத்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்.

இதனை உண்மை என்று நம்பிய ஜானகி, அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை உடனே கழட்டி மணிபர்சில் வைத்துள்ளார். பின்னர் அவர் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் வந்து பார்த்தபோது தங்க சங்கிலியுடன் மணிபர்ஸ் திருடு போனது தெரிய வந்தது. எனவே ஜானகி அருகில் இருந்த பெண் நூதன முறையில் நகையை அபேஸ் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் மினி பஸ்சில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை அபேஸ் செய்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்