பட்டா கத்திகளுடன் நள்ளிரவில் இளைஞர்கள் மோதிய சம்பவம்

பட்டா கத்திகளுடன் நள்ளிரவில் இளைஞர்கள் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-06-25 16:50 GMT

கலசபாக்கம்

பட்டா கத்திகளுடன் நள்ளிரவில் இளைஞர்கள் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செங்கம் தாலுகா மசார் கிராமத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென அழுகுரல் சத்தம் கேட்டது. அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு சென்றபோது 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பட்டா கத்திகளுடன் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை சமரசம் செய்து வைக்க முயற்சி செய்தபோது அவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பட்டாக்கத்தியால் தாக்கிக் கொண்ட இளைஞர்களை சுற்றிவளைத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த 3 இளைஞர்கள் மட்டும் போலீசாரிடம் சிக்கினர் மற்ற வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த வாலிபர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஆடையூர் வாய்விடாந்தாங்கல், மசார் ஆகிய கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இடையே கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளனர்.

இது குறித்து திருவண்ணாமலை தாலுகா மற்றும் கடலாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்