கடந்த ஒரு வாரத்தில் 11 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கையால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 11 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.;

Update:2023-04-30 11:41 IST

சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த ராபின் (வயது 27), சிசி மணிவண்ணன் (24), வேளச்சேரி சசி நகரை சேர்ந்த இருளா கார்த்திக் (24), பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரை சேர்ந்த ஊசி (22), அயனாவரம் மேட்டூர் தெருவை சேர்ந்த பிரதீப்குமார் (29), வாணுவம்பேட்டை என்.எஸ்.கே. பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (28), உள்ளகரம் காந்தி தெருவை சேர்ந்த மோனிஷ்குமார் (23), உள்ளகரம் காமராஜர் 2-வது தெருவை சேர்ந்த பிரான்சிஸ் (23), சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த அந்தமான் சுரேஷ் (25), அம்பத்தூர் எம்.டி.எச்.சாலை பகுதியை சேர்ந்த அர்ஜூன்தாஸ் (35), கோயம்பேடு அன்னம்மாள் நகரை சேர்ந்த சுப்பிரமணி (47) ஆகிய 11 பேர் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பிறப்பித்தார். சென்னையில் இந்த ஆண்டு இதுவரையில் 138 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்