தென்மண்டலத்தின் 10 மாவட்டங்களில் கடந்த 5 மாதங்களில், கஞ்சா விற்ற 917 பேர் கைது

தென்மண்டலத்தின் கஞ்சா விற்ற 917 பேர் கைது செய்யபட்டுள்ளதாக தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-25 15:04 GMT

மதுரை,

மதுரை, நெல்லை உள்ளிட்ட தென்மண்டலத்தின் 10மாவட்டங்களில் கடந்த 5 மாதங்களில், கஞ்சா விற்ற 917 பேர் கைது செய்யபட்டுள்ளதாக தென் மண்டல ஐஜி அஸ்ரா கர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கஞ்சா வியாபாரிகளின் ரூ.14 கோடி சொத்துகள் முடக்கபட்டுள்ளதாகவும், 1316 கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்களின் 2,448 வங்கிக் கணக்குகள் முடக்கபட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 5 மாதங்களில் 684 வழக்குகளில் தொடர்பு உடையவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்