கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்தக்காளி விளைச்சல் அமோகம்:விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தக்காளி அமோக விளைச்சல் அடைந்தது.

Update: 2023-02-19 18:45 GMT

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கூழையனூர், குச்சனூர், பாலார்பட்டி, குண்டல் நாயக்கன்பட்டி, உப்புக்கோட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முட்டைகோஸ், பீட்ரூட், தக்காளி முள்ளங்கி, கத்தரிக்காய், வெங்காயம், கொத்தமல்லி என அனைத்து வகையான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் அனைத்து பருவத்திலும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுவதே இப்பகுதியின் சிறப்பம்சம் ஆகும்.

இந்த பகுதியில் காய்கறிகள் முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் விளைச்சல் அடைவதால் மிகவும் சுவையாக இருக்கும். இதனால் வெளிமாவட்டம் மற்றும் கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் கடைமடை பகுதியில் விளையும் காய்கறிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது.

கடைமடை பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி கடந்த மாதம் சாகுபடி செய்யப்பட்டது. போதிய பாசன வசதி மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் தற்போது அவை நன்கு விளைச்சல் அடைந்துள்ளது. பின்னர் தக்காளி தரம் பிரிக்கப்பட்டு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. கடந்த வாரம் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்ட 15 கிலோ அடங்கிய கூடை தக்காளி தற்போது ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்