கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்முதல் போக நெல் சாகுபடி பணி தீவிரம்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடி பணி தீவிரமாக நடைபெறுகிறது.

Update: 2023-06-10 18:45 GMT

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் ஆண்டுதோறும் இருபோக சாகுபடி நடைபெறுகிறது. முல்லைப்பெரியாறு பாசனம் மூலம் இங்கு நெல் சாகுபடி நடைபெறுகிறது. இந்தநிலையில் இந்த ஆண்டு முதல் போக சாகுபடிக்காக கடந்த 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நாற்றங்கால் அமைத்தல், நெல் நாற்று பாவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கம்பம், கூடலூர் காமயகவுண்டன்பட்டி, உத்தமபாளையம், குச்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல் போக நெல் சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்