உயிர்காக்கும் உயர்சிகிச்சை பிரிவில் ரூ.54 லட்சம் செலவில் நவீன கருவி

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியின் உயிர்காக்கும் உயர்சிகிச்சை பிரிவில் ரூ.54 லட்சம் செலவில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சென்னைக்குப்பிறகு நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று டீன் பிரின்ஸ்பயஸ் கூறினார்.

Update: 2023-04-12 18:45 GMT

நாகர்கோவில்:

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியின் உயிர்காக்கும் உயர்சிகிச்சை பிரிவில் ரூ.54 லட்சம் செலவில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகளில் சென்னைக்குப்பிறகு நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று டீன் பிரின்ஸ்பயஸ் கூறினார்.

ரூ.54 லட்சத்தில் நவீன கருவி

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் சிறப்பு இருதயவியல்துறை, சிறுநீரகவியல் துறை, டயாலிசிஸ் பகுதி, தீவிர சிகிச்சை பிரிவு போன்ற பகுதிகளில் உயிர்காக்கும் உயர்சிகிச்சை பிரிவை மேம்படுத்த தமிழக அரசு மத்திய நுண்கிருமி நீக்கும் பகுதியில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் பிளாஸ்மா ஸ்டெரிலைசர் என்ற நவீன கருவியை நிறுவி உள்ளது.

இந்த கருவி மூலம் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யும் கருவியின் உதிரி பாகங்கள், ஆஞ்சியோகிராம் பண்ணும் கருவிகள், மயக்கவியல் துறை கருவிகள் மற்றும் நவீன அறுவை சிகிச்சை கருவிகளான எண்டாஸ்கோப்பி, லேப்பரஸ் கோப்பி கேமராக்கள், வெண்டிலேட்டர் உதிரி பாகங்கள் போன்ற கருவிகளை 100 சதவீதம் நவீன தொழில்நுட்ப வசதியுடன் அதாவது ஹைட்ரஜன் பொராக்சைடு மற்றும் பிளாஸ்மா தொழில்நுட்பத்தில் கிருமிகளை நீக்கம் செய்து மறுபடியும் பயன்படுத்த முடியும்.

மேலும் ரூ.87¾ செலவில் கருவிகள்

பொதுவாக இந்தகருவி கார்ப்பரேட் மருத்துவமனைகளில் மட்டும்தான் நிறுவப்பட்டிருக்கும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாட்டில் சென்னைக்குப்பிறகு ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில்தான்நிறுவப்படுள்ளது. மேலும் இந்த மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகளில் பயன்படுத்தும் கருவிகளை கிருமி நீக்கம் செய்ய தமிழ்நாடு மருத்துவ சேவைகழகம் மூலம் சுமார் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மேலும் மூன்று நவீன ஆட்டோகிளைவ் எந்திரங்களையும், நவீன நீராவி சலவை கூடத்திற்கு சுமார் ரூ.12 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் 4 சலவை எந்திரங்களையும் வாங்கி வழங்க கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி டீன் பிரின்ஸ்பயஸ் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ரூ.54 லட்சத்தில் நிறுவப்பட்டுள்ள பிளாஸ்மா ஸ்டெரிலைசர் என்ற நவீன கருவியின் செயல்பாடுகளை டீன் பிரின்ஸ் பயஸ் ஆய்வு செய்தார். அவருடன் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அதிகாரி ஜோசப் சென், மயக்கவியல் துறை தலைவர் எட்வர்ட் ஜான்சன், என்ஜினீயர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்