கள்ளக்குறிச்சி தங்கும் விடுதியில் பிணமாக கிடந்த கார் டிரைவர் போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி தங்கும் விடுதியில் கார் டிரைவர் பிணமாக கிடந்தார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
காஞ்சீபுரம் மாவட்டம் பெரிய காஞ்சீபுரம் உப்பேரிகுளம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 40). கார் டிரைவரான இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி, போலீஸ்காரர் ஒருவருக்கு கார் ஓட்டி வந்தார். சம்பவத்தன்று காலை நீண்ட நேரம் மணிவண்ணன் தங்கியிருந்த அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மணிவண்ணன் குளியலறையில் மர்ம மான முறையில் இறந்து பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணன் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.