கடம்பூர் மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

கடம்பூர் மலைக்கிராமத்தில் பழங்குடியின மக்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது

Update: 2023-08-09 21:21 GMT

உலக பழங்குடியினர் தின விழாவை முன்னிட்டு கடம்பூர் மலைக்கிராமத்தில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதையொட்டி ஆண்கள், பெண்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் கடம்பூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து குன்றி பிரிவு வரை ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் பழங்குடியினர் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியிருந்தனர்.

அதைத்தொடர்ந்து ஊராளி இன பெண்கள் தங்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தனர். இதையொட்டி கடம்பூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்