டிரைவர் கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-04-07 18:45 GMT

புதியம்புத்தூர் அருகே உள்ள சில்லாநத்தம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவருடைய மகன் நல்லதம்பி (வயது 34). லாரி டிரைவர். இவரை சொத்து தகராறில், அவருடைய தம்பி முத்துராஜ், மற்றொரு முத்துராஜ், பண்டாரம்பட்டியை சேர்ந்த அந்தோணி சேவியர் மகன் முருகதாஸ் என்ற ஜேசு (40) ஆகியோர் சேர்ந்து காட்டுப்பகுதியில் வைத்து அடித்து கொலை செய்து உள்ளனர்.

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து சொ.முத்துராஜ், சு.முத்துராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். முருகதாஸ் என்ற ஜேசுவை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் முருகதாஸ் என்ற ஜேசுவை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்