மாவட்டத்தில்புதிதாக 3 பேருக்கு கொரோனா

மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

Update: 2023-04-15 22:18 GMT

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 72 பேருக்கு பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் புதிதாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 742 ஆக உயர்ந்தது. இதற்கிடையில் நேற்று 3 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 984 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 734 பேர் இறந்துள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 24 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்