மாவட்டத்தில்9 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 9 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
மாநில நல்லாசிரியர்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவாக தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டது.
அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 9 பேர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். நல்லாசிரியர் விருது பெறும் 9 ஆசிரியர்களின் விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டது.
விருது பெறுபவர்கள்
அதன்படி தேனி மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெறுபவர்கள் விவரம் வருமாறு:-
பாலக்கோம்பை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தலைமை ஆசிரியர் வனிதாதேவி, வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மணிமொழி, ஸ்ரீரெங்கபுரம் எஸ்.ஆர்.ஜி. அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் உஸ்மான் அலி, தேனி நாடார் சரசுவதி மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியரும், கைத்தொழில் ஆசிரியருமான ஜெயராஜ், போடி பங்கஜம் நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை உமாபிரியா. பொன்னம்மாள்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லிங்கப்பன், கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர், ஊஞ்சாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் தயாளன், போடி ஹாஜி கே.எல்.கே.எஸ்.அப்துல்ரசாக் இண்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஆயிஷா அம்மாள் ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் ஆசிரியர் தின விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருது வழங்கி பாராட்டுகிறார்.